அமிதாப் நடித்த படத்தின் பிரீமியருக்கு ஒன்னுமே போடாமல் வந்த அழகி

Wednesday, May 8, 2013

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேட் காட்ஸ்பி படத்தின் பிரீமியர் ஷோவுக்கு பிரா கூட போடாமல் கலக்கல் கவர்ச்சியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் 2012ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவரன ஒலிவியா கல்போ.

லியானோர்டோ டி காப்ரியா நாயகனாக நடித்துள்ள படம்தான் தி கிரேட் காட்ஸ்பி. இப்படத்தில் அமிதாப்பும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரிமீயர் ஷோ நியூயார்க்கில் நடந்தது. அதில்தான் மிஸ் யுனிவர்ஸ் ஒலிவியோ செம கலக்கலான டிரஸ்ஸில் வந்திருந்தார்.


(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)
Continue Reading | comments
Blogger Tricks

தொலைந்த 3 பெண்கள் 10 ஆண்டின் பின்னர் 3 சகோதரரிடம் இருந்து சாதுரியமாக மீட்பு

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் 10 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரே வீட்டில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூவரும் வெவ்வேறு தருணங்களில் தனித்தனியே காணாமல் போனவர்கள் இப்போது ஒரே நேரத்தில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.

உயிரோடு மீட்கப்பட்டுள்ள பெண்களில் அமாண்டா பெர்ரி என்பவர் 2003ஆம் ஆண்டு தன்னுடைய 16 வது வயதில் காணாமல் போனார்.

2004ல் காணாமல்போன ஜீனா டிஜீஸெஸுக்கு அப்போது 14 வயதுதான் ஆகியிருந்தது. இவர்களுக்கெல்லாம் முன்பாக 2002ல் காணாமல்போன மிஷெல் நைட்டுக்கு தொலைந்த போது அவரது வயது 19.

போலீசிடம் உதவி கோரிய அமாண்டா

கிளீவ்லாந்தின் தெற்கு பகுதியில் இருந்த ஒரு வீட்டில் பல வருடங்களாக அடைபட்டுக் கிடந்த இந்த 3 பெண்களில் அமாண்டா பெர்ரி, விடுதலைக்காக பரபரபரப்பான முயற்சி ஒன்றில் இறங்கினார்.

தங்களை அடைத்துவைத்திருந்தவர் வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் அமாண்டா பெர்ரி உதவி கோரி கூச்சலிட்டிருந்தார்.

இந்தச் சத்தம் அருகில் வாழ்ந்தவர் சார்ல்ஸ் ராம்சே என்பவர் காதில் விழ, பூட்டியிருந்த கதவை அவர் உடைத்து திறந்துவிட இந்தப் பெண் வெளியில் வந்துள்ளார்.

இருவரும் உடனடியாக 911 தொலைபேசி அவசர உதவி சேவைக்கு அழைக்க போலீசார் வந்து அனைவரையும் விடுவித்துள்ளனர்.

3 சகோதரர்கள் கைது

இந்தப் பெண்களை கடத்தி அடைத்துவைத்திருந்தது தொடர்பாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதாவர்கள் ஹிஸ்பானியர்கள் என்றும் 54,52,50 வயதுடையவர்கள் இவர்களில் ஒருவர் வாழ்ந்துவந்த வீட்டில்தான் இந்தப் பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் கிளீவ்லண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீட்டியில் ஆறு வயதுக் குழந்தை ஒன்றும் இருந்தது.இக்குழந்தை பற்றி எவ்வித விவரமும் போலீசார் தெரிவிக்கவில்லை.

ஆனால் தனக்கு மகள் இருப்பதாக காப்பாற்றப்பட்ட அமாண்டா பெர்ரி தெரிவித்ததாக அவரின் உறவுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண்களின் உடல்நிலையில் பெரிய பாதிப்புகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சாதாரணமாக இந்த மாதிரியானக் கதைகளில் இப்படியான நல்ல முடிவு இருப்பதில்லை. இவர்கள் உயிரோடும் நலத்தோடும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று கிளீவ்லண்ட் மெட்ரோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜெரால்ட் மெலொனே தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த கடத்தல்கள்

ஆனால் இப்படி பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்கள் காப்பாற்றப்பட்ட சம்பவங்களை இது நினைவூட்டுகிறது.

கலிஃபோர்னியாவில் 1991ல் காரில் கடத்திச் செல்லப்பட்ட ஜெய்சி லீ டுகார்ட் என்பவர் 18 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பின் 2009ல் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாக காப்பாற்றப்பட்டிருதார்.

ஆஸ்திரியாவிலும் பத்து வயதில் கடத்தப்பட்ட நடாஷா கம்புஷ்ச் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ல் காப்பாற்றப்பட்டார்.

"சாதாரணமாக இந்த மாதிரியானக் கதைகளில் இப்படியான நல்ல முடிவு இருப்பதில்லை. இப்பெண்கள் உயிரோடும் நலத்தோடும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது" கிளீவ்லண்ட் மருத்துவர் டாகடர் ஜெரால்ட் மெலொனே.


(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)

Continue Reading | comments

தமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: ஜெயலலிதா அதிரடி

முதல்வர் ஜெயலலிதா இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது பான் மசாலா, குட்கா போன்றவற்றை இங்கு தயாரித்து, விற்க தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவி்ப்பில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி தரப்படும். ஆண்டுதோறும் இனிமேல் 15 சதவீதம் நிதி உயர்த்தப்படும்.

அரசு மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் 15 இடத்தில் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

நெசவாளர்களுக்கு இந்தாண்டு 10 ஆயிரம் பசுகை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து குட்கா , பான் மசாலா போன்றவற்றை தமிழகத்தில் தயாரிக்க முடியாது, கடைகளில் விற்க முடியாது. யாரும் இருப்பு வைக்கவும் கூடாது.

இதன் மூலம் சாந்தி உள்ளி்ட்ட பெயர்களில் பான் பராக்கை கண்ட இடங்களில் மென்று தினறு புளிச் புளிச் என யாரும் துப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)

Continue Reading | comments

மூன்று வெவ்வேறு ஊடகங்களின் சூது கவ்வும் பட விமர்சன ஒப்பீடு

(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)

பாய்ஸ்" நகுல், "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார்! அதைத்தொடர்ந்து வெளிவந்த "மாசிலாமணி", "கந்தகோட்டை" உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படம் என்றால் மிகையல்ல!

இமாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் தன் தாய் சீதாவுடன், மாமா வாசு விக்ரமின் ஆதரவில் வாழும் ஜீவா எனும் நகுல், சதா சர்வகாலமும் தூங்கி வழியும் கேரக்டர். ஒருநாள் சிறுவர்களுடன் விளையாட்டுத்தனமாக மிலிட்டரி கேம்பிற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பதற்காக சின்ன தண்டனை பெறும் அவரை பார்க்கும் ஜவான் ஒருவர், சென்னையில் தன்னுடன் படித்த ராஜா மாதிரியே ஜீவாவும் இருப்பதாக சொல்லி கிக்பாக்ஸிங் புலியான ராஜாவின் வீடியோவையும் ஜீவாவிற்கு போட்டு காட்டுகிறார். அந்த வீடியோவைப்பார்த்தது முதல் தன் மாதிரியே இருக்கும் ராஜாவை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஜீவாவிற்குள் துளிர்விடுகிறது. அம்மா, மாமா ஆகியோர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ரயிலேறுகிறார் ஜீவா அலைஸ் நகுல்!

அப்புறம் ? அப்புறமென்ன...?! வழியில் போபாலில் ராஜாவை ஒரு தலையாக காதலித்து தோற்ற அவரது தோழி ரீகா எனும் அவனி மோடியையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, ஜீவா எனும் நகுல் தான் ராஜா என்பதும் தெரிய வருகிறது. அவரது காதலி சாந்தினி என்ன ஆனார்? ராஜா - ஜீவாவாகக் காரணம்  யார் யார்...? அவர்‌களை ஜீவா அலைஸ் ராஜா எனும் நகுல் எவ்வாறு பழிதீர்த்தார்? காதலி சாந்தினியை கரம் பிடித்தாரா...? இல்லையா...? என்பது நான் ராஜாவாகப்போகிறேன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

‌ஒரே நகுல், ஜீவா - ராஜா என இருவேறு பரிமாணங்களில் வெகுளி பாத்திரத்திலும், வெகுண்டெழும் பாத்திரத்திலும் கிடைத்த கேப்பில் எல்லாம் நடித்து "நான் ராஜாவாகப்போகிறேன்" படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதிலும் கிக்பாக்ஸிங் நகுல் செம கிளாஸூங்கோ!

சாந்தினி, அவனி மோடி என இரண்டு நாயகியர். இருவரில் சாந்தினி ஹோம்லி, பேமிலி என்றால், அவனி மோடி கிளாமர் ப்ளேவர்... வாவ்., நடிப்பிலும் என்னமாய் மிரட்டுகிறார்கள் அம்மணிகள். சாந்தினி, அவனி மோடி மாதிரியே முஸ்லிம் பெண் தோழியாக வரும் ஜானகியும் நடிப்பில் நம்மை வருகிறார்.

நகுலின் முஸ்லிம் நண்பராக வரும் நிஷாந்த், அடியாள் கூட்ட தலைவராக வரும் "தூங்காநகரம்" இயக்குநர் கெளரவ், சீதா, ஆர்த்தி, கஸ்தூரி, வனிதா விஜயகுமார், செந்தி, ஒருபாடலுக்கு ஆடும் ஸெரீன் கான், நகுலின் அப்பாவாக வரும் மாஜி ஹீரோ சுரேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன், மனோகர், "மூணாறு ரமேஷ் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் காட்டிலும் சிறப்பு தோற்றத்தில் பி.டி.கத்திரிக்காய் உள்ளிட்ட விஞ்ஞானத்தின் விநோதங்களையும், அதன் தீமைகளையும் பேசும் மணிவண்ணனின் சிறப்பு தோற்றமும், அவரது அநியாய மரணம் மற்றும் வில்லாதி வில்லனாக வரும் ஏ.வெங்கடேஷின் கெட்ட-அப்பும் பிரமாதம், பிரமாண்டம்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, வெற்றிமாறனின் வசனம், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஜோ‌தி பிரகாஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், புதியவர் பிருத்விராஜ் குமாரின் எழுத்து இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன.

வழக்கமான தமிழ் சினிமா மாதிரியே இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி எனும் பெயரில் படம் பிடித்து காட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒருசில் சின்ன சின்ன போராட்டங்கள் மூலம், இலங்கை தமிழர் விவகாரத்தையும், பி.டி.கத்திரிக்காய், வேலி கருவேல் மரங்களின் விஞ்ஞான விபரீதத்தையும் இந்தப்படம் அளவிற்கு எந்தப்படமும் அழகாக அறிவுறுத்தியதில்லை... எனும் காரணங்களுக்காகவே "நான் ராஜாவாகப்போகிறேன்" சோடை போகவில்லை! நல்விலை போகும் எனலாம்

மொத்தத்தில், "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படத்திற்கு தமிழ் ரசிக மந்திரிகள் ஆதரவு நிச்சயம்! நிதர்சனம் எனலாம்!!

குமுதம் சினி விமர்சனம்


ஒரு தாதா டைப் கதையில், நாட்டையே பாழாக்கும் மரபணு விதை. பிளாஸ்டிக் பயன்பாடு என்று சமூகப் பிரச்னையைத் தொட்டதற்காகவே இயக்குநர் பிரித்வி ராஜ்குமாரைப் பாராட்டலாம்.

தன்னைப்போல் உருவம் உள்ள ஒருவனைப் பார்க்கிறார் நகுல். அவனைத் தேடி சென்னைக்கு வர, அங்கே கில்லி ஸ்டைலில் கதாநாயகியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, கடைசியில் என்ன ஆயிற்று என்பதுதான் கதை.

நகுல் இரட்டை வேடம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஆனால் அவர் டபுள் ஆக்ட்டா இல்லையா என்ற சஸ்பென்ஸ் பலே! நகுலுக்கு சண்டை நன்றாக வருகிறது.

சாந்தினி, அவனி என்று இரண்டு நாயகிகள். முதலாமவர் பெரிய கண்ணோடு ஜெனிலியா மாதிரி இருக்கிறார். இரண்டாமவர் சின்ன கண்ணோடு சின்மயி மாதிரி இருக்கிறார்.

வில்லனின் ஆட்கள் ஹீரோ, ஹீரோயினைப் பார்த்ததும் போட்டுத் தள்ளாமல் செல்ஃபோனில் சும்மா ரன்னிங் கமெண்ட்ரி கொடுப்பது எரிச்சல்.

வசனம் வெற்றி மாறனா? சொந்தப் படத்துக்குத்தான் நல்லா எழுதுவார் போலிருக்கிறது!

வேல்ராஜின் கேமரா கண்களுக்கு ஐஸ்கட்டி!

ராஜாவை ஜோக்கர் ஆக்கியிருக்கிறார்கள்.

குமுதம் ரேட்டிங்: ஓகே.




------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்



வழக்கமான ஆள் மாறாட்டக் கதையில் நகுல் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் - நான் ராஜாவாகப் போகிறேன். ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் துரோகத்துக்குத் துணை போகும் அண்ணாச்சிக்கு எதிராக களத்தில் குதிக்கும் ஒரு காதல் ஜோடியின் போராட்டங்கள்தான் திரைக்கதை.

ஆக்ஷன் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளும் நகுல், கேரக்டரின் கனம் தாங்காமல் தத்தளிப்பது பரிதாபம். அதுவும் நகுலின் டயலாக் டெலிவரி சுத்த மோசம்.

ஹீரோயின் சாந்தினியின் முகத்தில் இருக்கும் மென்சோகத்துக்குக் காரணம், அவர் கொத்தனாரின் பொண்ணு என்பதும், அவர் ஈழப் பிரச்னை, பி.டி. கத்திரிக்காய் விழிப்புணர்வு பிரசாரம் என ஆர்வம் காட்டும் சட்டக் கல்லூரி மாணவி என்பதும் லாஜிக்.

ஒருதலையாக நகுலை காதலிக்கும் இன்னொரு ஹீரோயின் அவனி மோடி ஆவரேஜ் ரகம்.

முழங்கால் வரை தூக்கிக் கட்டிய வேட்டி, முழங்கை வரை இறக்கிவிட்ட சட்டை... என இயக்குனர் ஏ. வெங்கடேஷின் கேரக்டரில் வில்லத்தனம் இல்லை. மாறாக கிக்லிபிக்லி காமெடி விளையாட்டு.

ஹிமாச்சலப்பிரதேசத்துக்கும் சென்னைக்கும் போடப்படும் ஃப்ளாஷ்பேக் முடிச்சில் ஈர்ப்பு அதிகம்.

கதை சென்னைக்கு நகரும்போது வில்லன்களின் துரத்தல், ஃபைட், கொலை... என நசநசப்பில் மாட்டிக்கொண்டு நொண்டுகிறது. தவிர, ஏகப்பட்ட ஃப்ளாஷ்பேக். எதுக்கு எது என்பதில் சற்றே குழப்பம்தான்.

பி.டி.விதைகள், ஈழ விவகாரம்... என எரியும் பிரச்னைகளைக் கையிலெடுத்திருப்பதும், அதனை இயக்குனர் மணிவண்ணன் மூலம் பேசியிருப்பதும் பாராட்ட வேண்டிய விஷயங்கள். அவர் தரும் பி.டி. பயங்கர புள்ளிவிவரங்கள் திக்திக்.

வெற்றிமாறனின் வசனத்தில் புதுமை இல்லை; ஏகப்பட்ட ரிப்பீட்டு, ஜீ.வி. பிரகாஷ் குமாரின் இசையில் கலாய்ப்போம் பாடல் மட்டும் கலகல ரகம்.

வேல்ராஜின் ஒளிப்பதிவில் ஹிமாச்சலப் பிரதேசம் மட்டும் பளிச்சுன்னு தெரிகிறது. மற்ற காட்சிகளில் ஈர்ப்பு இல்லை. ஜோதி பிரகாஷின் எடிட்டிங்கும் அப்படியே.

சீதா, நகுலை மருத்துவமனையில் இருந்து கடத்தி வரும் காட்சி, ராம்ஜெத்மலானி வருகிறார் என்பது நகுல் பொய் சொல்லி நடிப்பது... லாஜிக் ஓட்டைகள் நிறைய.

எடுத்துக்கொண்ட கனமான கதைக்கு ஏற்ப திரைக்கதையை இழுத்துப் பிடித்த, தேவையானவற்றை நறுக்கி விட்டிருந்தால் கதை நறுக்சுறுக்குன்னு இருந்திருக்கும்.

கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடும் காரை எங்கு நிறுத்துவது என்று தடுமாறும் டிரைவரைப் போல தடுமாறி இருக்கிறார் இயக்குனர் பிரிதிவி ராஜ்குமார்.

(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)

Continue Reading | comments

விஷாலின் குள்ள நரித்தனத்துக்கு பலிக்கடாவான குமரி முத்து

Tuesday, May 7, 2013

"நடிகர் குமரிமுத்துவை, சங்கத்திலிருந்து நீக்கிய நடிகர் சங்கம், நடிகர் விஷால் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது, உறுப்பினர்களுக்கு ஓரவஞ்சகம் செய்வதை போல தோன்றுகிறது என, சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடிகர் விஷால் சங்கத்திலிருந்து நீக்கப்படாததன் பின்னணியில், 15 இளம் நடிகர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

"நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் முறைகேடு நடப்பதாக, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டடம் தொடர்பாக, சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, கடிதம் மூலம், நடிகர் குமரிமுத்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.

"கமலின், "விஸ்வரூபம் படம் பிரச்னையில் சிக்கிய போது, "நடிகர் சங்கம் கண்டுகொள்ளவில்லை என, நடிகர் விஷால், இணைய தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

நடிகர் சங்கத்தை குறை கூறிய இவர்களிடம், விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் மூலம், இருமுறை கடிதம் எழுதப்பட்டது. குமரிமுத்துவும், விஷாலும், விளக்க கடிதம் அனுப்பாமல் இருந்தனர். இரண்டு முறை செயற்குழு கூட்டப்பட்டு, இருவரின் பிரச்னை குறித்து பேசப்பட்டது. பிப்ரவரி மாதம் செயற்குழு கூட்டம் நடந்தபோது, குமரிமுத்து நேரில் ஆஜராகி, நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்தார். அதே நேரத்தில், நடிகர் விஷால் நேரில் செல்லாமல், தான் அனுப்பிய விளக்க கடிதத்தில், "நடிகர் சங்கம் குறித்து, மற்ற உறுப்பினர்கள் பேசியதையே நானும் தெரிவித்திருந்தேன். சங்கம் குறித்து தவறாக கருத்து ஏதும் சொல்லவில்லை. என் போன்ற நடிகர்களை சங்கடப்படுத்தாதீர்கள். நான் நடித்த,"சமர் படப் பிரச்னையில், சங்கம் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என, குறை கூறியிருந்தார்.

நடிகர் விஷாலிடம் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் அனுப்பிய கடிதம், அவர் விளக்கம் அளிக்க, நேரில் ஆஜராகாதது, பிற நடிகர், நடிகைகளுக்கு தெரிய வர, தமிழ்ச் சினிமாவில், முன்னணியில் உள்ள, 15 இளம் நடிகர்களும், சில நடிகைகளும் மொபைல் போனில், விஷாலை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போது, "உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், சங்க செயல்பாடு குறித்து, நாங்கள் அடுத்தடுத்து பிரச்னையை கிளப்புவோம்; கவலைப்படாதீர்கள். இக்கடிதத்திற்கு, உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டாம். சங்கத்தின் அடுத்த நடவடிக்கை என்னவென்று பார்ப்போம் என பேசி, ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.

இத்துடன், சங்க செயல்பாடு குறித்து மூத்த நடிகர், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் கவலை தெரிவித்து இருந்தார். கமலின்,"விஸ்வரூபம் படப் பிரச்னையில், "நடிகர் சங்கம் கண்டுகொள்ளவில்லை என்பதை, வேறு சில நடிர்களும் இணை தளம் மூலம் கருத்து தெரிவித்திருந்தனர். சிலர் தெரிவித்த தகவல்கள் பத்திரிகைகளிலும் வெளியாகின. இந்த சூழ்நிலையில், நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில், நடிகர் விஷால் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குமரிமுத்துவை நீக்கினால், அவருக்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுத்தால், அவருக்கு ஆதரவாக இளம் நடிகர்கள், 15 பேர் வரை களமிறங்கலாம் என்ற தகவல் தெரிய வந்தால், விஷால் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த மாதம், 30ம் தேதி, நடிகர் விஷால், நடிகர் சங்கத்திற்கு நேரில் சென்று , நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, சங்க நிர்வாகிகள், "உங்கள் மீது எந்த நடவடிக்கை இல்லை என, கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, ஓரவஞ்சகம் போல உள்ளது என்று நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)

Continue Reading | comments

வில்லி வேடம் ஏற்று நடிக்கும் ராதா மகள் துளசி

முதல் படமான, "கடல் கை விட்டதால், கவலையடைந்த துளசி, தற்போது அதிலிருந்து மீண்டு, தன் அடுத்த படத்தில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஜீவா ஜோடியாக, "யான் படத்தில் நடிக்கும், துளசிக்கு, இதில், செமத்தியான கேரக்டராம்.வில்லத் தனம் கலந்த ஹீரோயின் கேரக்டர் என, கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிளாமர்,  டூயட் என, சராசரியான ஹீரோயின்களை போல் இல்லாமல், இரண்டாவது படத்திலேயே, மாறுபட்ட நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும், வித்தியாசமான கேரக்டர் கிடைத்திருப்பதால், உற்சாகமாக இருக்கிறார், துளசி.இந்த படம், ஹிட்டாகும் என, நம்பிக்கையுடன் இருக்கும் துளசி, இதற்கு அடுத்தபடியாக, தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், நம்புகிறார்.

(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)

Continue Reading | comments

கமலுக்குமு் ஸ்ருதிக்கம் உள்ள மிகப் பெரும் வேறுபாடுகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு, கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அவரது மகள், ஸ்ருதி, இந்த விஷயத்தில், முற்றிலும், தன் தந்தைக்கு, நேர் மாறாக இருக்கிறார். எந்த ஊருக்கு படப் பிடிப்புக்கு சென்றாலும், நேரம் கிடைக்கும்போது, அங்குள்ள பிரபலமான கோவில்களுக்கு சென்று, வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும், அவர் அறிமுகமான படங்கள், பெரிய அளவுக்கு பேசப்படவில்லை என்பதால், இந்த இரண்டு மொழிகளிலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார், அவர். தான், நடித்த தெலுங்கு படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஆந்திராவில் உள்ள, கோவிலிலும், மனம் உருக வேண்டினாராம். அவரது வேண்டுதல் பலித்து, படம், சூப்பர் ஹிட்டாகி, தெலுங்கின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இதனால், ஸ்ருதிக்கு, கடவுள் நம்பிக்கை அதிகரித்து விட்டதாம்.

(எமது தளத்தில் இருக்கும் கூகுல் விளம்பரத்தை கிளிக் பண்ணுவதன் மூலம் எம் வளர்ச்சிக்கு உதவுங்கள்)

Continue Reading | comments
Related Posts Plugin for WordPress, Blogger...

மருத்துவம்

தொழில்நுட்பம்

சுவாரசியம்

தொலைக்காட்சி

Topics :